அக்டோபர் 31ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி மக்களின் நல்வாழ்வை அதிகரிப்பதென்ற ஏபெக்கின் கோட்பாட்டில் நாங்கள் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். மேலும், திறந்த வளர்ச்சியில் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு கூட்டு வெற்றியை நனவாக்குவதில் ஊன்றி நிற்க வேண்டும். பொது மக்களுக்கு நன்மை தந்து அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதர உலகமயமாக்கத்தை முன்னேற்றி ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு அவர் பலதரப்புவாத வர்த்தக அமைப்பு முறையைக் கூட்டாகப் பேணிக்காத்தல், திறந்த பிரதேசப் பொருளாதாரச் சூழலைக் கூட்டாக உருவாக்குதல், தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியின் நிதானம் மற்றும் தடையில்லாத நிலையைக் கூட்டாகப் பேணிக்காத்தல், வர்த்தக எண்ணியல்மயமாக்கல் மற்றும் பசுமைமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றுதல், அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டையும் அனைவருக்குமான முன்னேற்றத்தையும் கூட்டாக முன்னெடுத்தல் ஆகிய ஐந்து முன்மொழிவுகளையும் வழங்கினார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                