போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம் : ஒரே ஒரு தடவை முதலீடு.. மாதம் தோறும் வருமானம்..!!

Estimated read time 0 min read

போஸ்ட் ஆபீஸ் மாத திட்டத்தில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதம் வட்டித் தொகை மூலம் பென்சன் பெற முடியும்.

இதுமட்டுமல்லாமல், இத்திட்டம் மெச்சூரிட்டி அடையும்போது, நீங்கள் ஒருமுறை மட்டும் செலுத்திய தொகை திருப்பிச் செலுத்தப்படும். தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்துக்கு தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டித் தொகை உங்களுக்கு செலுத்தப்படும்.

மாத வருமானத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். ஒரு நபரால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள்.

இத்திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 617 ரூபாய் பென்சனாக கிடைக்கும். ஆண்டுக்கு 7400 ரூபாய் பென்சன் கிடைக்கும். 5 ஆண்டுகளில் 37000 ரூபாய் கிடைக்கும்.

இந்த மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு பாதுகாப்பான திட்டமாகும். இது இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானத்தை வழங்குகிறது.

இதில், 5 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் அல்லது வழக்கமான மாத வருமானத்தை விரும்புவோர் முதலீடு செய்யலாம்.

நீங்கள் தனியாகவோ அல்லது இரண்டு நபர்களுடன் சேர்ந்தோ கணக்கைத் திறக்கலாம்.

ஒரே கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக இருந்தால், ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் உங்களுக்கு மாதந்தோறும் வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ.5,550 வட்டி (ரூ. 9,00,000 × 7.4% ÷ 12) கிடைக்கும்.

நீங்கள் ரூ.3,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ. 1,925 கிடைக்கும். நீங்கள் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.5,775 வட்டி கிடைக்கும். அதே கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.9,250 (ரூ.15,00,000 × 7.4% ÷ 12 மாதங்கள்) மாதந்தோறும் வட்டி கிடைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author