உலகளவில் இவ்வாண்டின் கோடைகாலத்தில், “China Travel” பெரும் வரவேற்பைப் பெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பின்படி, சர்வதேச சமூகத்தில் சீனாவின் மீதான ஆர்வம் உயர்வேகமாக அதிகரித்து வருவதை இது வெளிப்படுத்தியுள்ளது என்று 92.9 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது குறித்து, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சீனச் சுற்றுலா பற்றிய தகவல்கள், சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாக 92.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், விசா இல்லாத கொள்கையுடன் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 78 லட்சத்து 15 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது குறித்து, விசா மற்றும் சுங்க நடைமுறை நடவடிக்கைகளை சீனா தொடர்ச்சியாக மேம்படுத்துவது, வெளிநாட்டவர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்று 91.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
