ஓட்டு போட ஆதார் போதுமா? – 12 மாற்று ஆவணங்களின் பட்டியல் இதோ!

Estimated read time 1 min read

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் வாக்களிக்கும் முன்பு உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கொண்டது. அப்போது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டது. மேலும், தகுதியுள்ளவர்களின் வாக்காளர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. எனவே, தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் உடனே அதனை சேர்க்க வேண்டும். மார்ச் 27ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேளை குறிப்பிட்ட நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை என்றால், உங்களால் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. எனவே, உடனே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பது எப்படி?

1.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

2. அங்கு படிவம் 6-ஐ பெற்று அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். வயது, முகவரி, பெற்றோர்/கணவர்/மனைவி பெயர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்

3. பூர்த்தி செய்ய படிவத்தை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். மேலும், இதற்கான ரசீதையும் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

4. உங்களது படிவத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பார்கள்.

உங்கள் பெயரை எப்படி கண்டுபிடிக்கலாம்?

1. வாக்காளர் பட்டியலில் உங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிய election.tn.gov.in என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்

2. பிறகு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

3. வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீடு SIR 2026 என்பதை கிளிக் செய்ய வேண்டும்

4. மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்களை சமர்ப்பித்து, உங்கள் வாக்குச்சாவடியை தேர்வு செய்து கொள்ளவும்

5. இறுதியாக, pdf-ஐ பதிவிறக்கம் செய்து, உங்கள் பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும். வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை காண்பிடித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author