வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்  

Estimated read time 1 min read

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் எரிசக்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கியுள்ளது உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 17 வரை ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்காமல் தவிர்த்து வந்த இஸ்ரேல், புதனன்று உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான ‘South Pars’ மீது தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஈரான், சவுதி அரேபியாவின் ‘அராம்கோ’ சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிவாயு நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author