உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல், பல மாதங்களுக்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, ஒரு அரசு வசதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீது பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என மேற்கு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்தத் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகளும் தாக்கப்பட்டதாக கீவ் நகர மேயர் வித்தாலீ கிளிட்ச்கோ தெரிவித்தார்.
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; உக்ரைன் பதிலடி
