தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

தெற்கு ரயில்வேயின் பாராட்டுக்குரிய முயற்சியாக திருநங்கை ஒருவரை பயண டிக்கெட் பரிசோதகராக நியமித்துள்ளது.

37 வயதான சிந்து கணபதி என்ற பெயர்கொண்ட அந்த திருநங்கை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலில், 2003ல் ரயில்வேயில் ஆண் ஊழியராக பணிக்கு சேர்ந்த ஜி.சிந்தனுக்கு, அவரது உடலமைப்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.
இதனால் பல அவமானங்களை அவர் சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார். இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான சிந்தன், 2010ல் வேலையை விட்டுவிட்டார்.

அதன்பின்னர், திருநங்கை சமூகத்தருடன் வாழ்க்கையை தொடங்கிய சிந்தன், 18 வருடங்கள் கழித்து மீண்டும் ரயில்வேயில் சேர முயன்றார்.

You May Also Like

More From Author