சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் முக்கியச் சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சுங்க வரி போர், வர்த்தகப் போர், அறிவியல் தொழில்நுட்பப் போர் ஆகியவை வரலாற்றுப் போக்கு மற்றும் பொருளாதார விதியை மீறியுள்ளன. இதனால் இவற்றில் யாரும் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியான உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி, பொருளாதார செயலுக்கான முக்கியமான உத்தரவாதமாகும் எனக் குறிப்பிட்ட ஷிச்சின்பிங், அதன் உருவாக்கமும் வளர்ச்சியும் சந்தை சட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனத் தேர்வுகளின் கூட்டு விளைவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல்முறை சீர்குலைந்தால், அது துண்டிக்கப்பட்ட உற்பத்தி, அதிக செலவு மற்றும் மெதுவான தொழில்நுட்பப் புத்தாக்கத்துக்கு வழிவகுக்கும்.
உலகின் இரு பெரிய பொருளாதாரங்களான, சீனாவும் அமெரிக்காவும் உண்மையில் உலக உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் தங்களது சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளன என்றார்.
உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பால் மட்டுமே பொருளாதாரப் பயனை மேம்படுத்தவும் கூட்டு வளர்ச்சியை அடையவும் முடியும். அதுபோல், கூட்டு ஒருங்கிணைப்பை நனவாக்குவதன் மூலம் மட்டுமே, விநியோகச் சங்கிலியின் நிதானத்தையும் சீரான ஓட்டத்தையும் நிலைநிறுத்த முடியும்.
அப்போது தான் விநியோகச் சங்கிலி உண்மையிலேயே கூட்டு வெற்றி பெறும் சங்கிலியாக மாறும். “புதிய” என்ற வார்த்தை சார்ந்து இரு தரப்புகளும் ஒத்துழைக்க முடியும். உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய இயக்கு ஆற்றலை ஊட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.