மின்சார வாகனங்களின் மீதான சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு விலை பற்றிய சீன-ஐரோப்பிய ஒன்றிய கலந்தாய்வு குறித்து, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யூன்ச்சியான் கூறுகையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் வர்த்தக சர்ச்சையைத் தீர்க்க சீனா எப்போதுமே விரும்புகிறது. ஐரோப்பிய தரப்பு நடைமுறை நடவடிக்கையை வெகு விரைவில் மேற்கொண்டு, சீனாவுடன் கூட்டாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றார்.
