இரு மொழிக் கொள்கைதான் இந்த அரசின் கொள்கை என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்ததாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறினர்.
இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் உடன் முதலமைச்சர் விஜயை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் சம்சீர் அகமது மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் மிருதுளா உள்ளிட்டோர் பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரை இன்று சந்தித்தோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான 29 கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்தோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலையாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.
நாப்கின் இயந்திரங்களை பள்ளி கல்லூரிகளில் வைப்பதற்கு கோரிக்கை வைத்து அதனையும் செய்து தருவதாக முதலமைச்சர் உறுதி கொடுத்தார். பள்ளிகளின் கட்டமைப்பை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனையும் முதலமைச்சர் செய்து தருவதாக கூறினார். ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், பெண்களுக்கு வழப்படுகின்ற இலவச நாப்கின் வழங்க வேண்டும் மேலும் அதை பயன்படுத்திய நாப்கின் எரியூட்ட இயந்திரங்கள் வேண்டும் என தெரிவித்திருகிறோம்” என தெரிவித்தார்.
