சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் துணை அரசுத் தலைவர் அல்க்மினைச் சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள் அரசுத் தலைவர் லுலாவுடன் புதிய காலத்தில் சீன-பிரேசில் உறவின் புதிய எதிர்காலத்தைத் திறந்து வைப்பது பற்றி முக்கிய ஒத்தக் கருத்தை எட்டியுள்ளேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக, இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், இரு நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கை ஆழமாகி, எதார்த்தமான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி, சர்வதேச அரங்கில் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளன என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பிரேசிலுடன் இணைந்து பாரம்பரிய துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பசுமை பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், புத்தாக்கம் உள்ளிட்ட புதிதாக வளர்ந்து வரும் துறைகளிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் பற்றிய முன்மொழிவை, பிரேசிலின் “மறு தொழில்மயமாக்கம்”, “தென் அமெரிக்க ஒருமைப்பாட்டு நெறி” உள்ளிட்ட வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களுடன் இணைப்பதை வலுப்படுத்த சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
அல்க்மின் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளில் கோடிக்கணக்கான சீன மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். இது உலகின் அற்புதமாகும். தொடர்புடைய அனுபவங்கள் பிரேசிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 50ஆவது ஆண்டு நிறைவை புதிய துவக்கப் புள்ளியாக கொண்டு, சீனாவுடன் இணைந்து, இரு நாட்டுறவை புதிய மட்டத்திற்கு உயர்த்த முயற்சி மேற்கொள்ள பிரேசில் விரும்புவதாக தெரிவித்தார்.