இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், சிறு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் வழிவகை செய்யும் ‘நிறுவன சட்டங்கள் (திருத்த) மசோதா 2026’-ஐ (Corporate Laws Amendment Bill, 2026) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்கிறார்.
இந்த மசோதாவின் மூலம் 2013-ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம் (Companies Act) மற்றும் 2008-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைச் சட்டம் (LLP Act) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
குறிப்பாக, சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் சந்திக்கும் சிறிய அளவிலான விதிமீறல்களை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுவித்து, அவற்றுக்கு அபராதம் மட்டுமே விதிக்கும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட உள்ளன.
நிறுவன சட்டங்களில் முக்கிய திருத்தங்கள்: லோக்சபாவில் இன்று புதிய மசோதா தாக்கல்
