கட்சி சாராத பிரமுகர்களின் கலந்துரையாடலில் ஷிச்சின்பிங் உரை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி சாராத பிரமுகர்களின் கலந்துரையாடல் கூட்டம் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பிற்பாதி பொருளாதாரப் பணிகள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத இதர கட்சிகளின் மத்திய கமிட்டி, அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனங்களின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரதிநிதிகள் ஆகியோர்களின் முன்மொழிவுகள் கேட்டறியப்பட்டன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் வலியுறுத்துகையில், பிற்பாதி பொருளாதாரப் பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும். புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தை சரியாகவும் முழுமையாகவும் பன்முகமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய வளர்ச்சிக் கட்டமைப்பின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி உள்நாடு மற்றும் சர்வதேச நிலைமையையும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பையையும் சீராக ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை ஆழமாக்குவதில் ஊன்றி நின்று பொருளாதாரத்தை சீரான போக்கில் தொடர்ந்து முன்னேற்றி 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் சிறந்த துவக்க ஆண்டை நனவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author