லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில், வேலை வாய்ப்புகள், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாஞ்ச் நியாய்’ அல்லது ஐந்து நீதித் தூண்கள்: ‘யுவ நியாய்’,’நாரி நியாய்’,’கிசான் நியாய்’,’ஷ்ரமிக் நியாய்’ மற்றும் ‘ஹிஸ்ஸேதாரி நியாய்’ ஆகியவை ஆகும்.
கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, சாதிகள், துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் என்று கட்சி உத்தரவாதம் அளிக்கிறது.