டெஸ்லாவின் ஷாங்காய் எரிசக்தி சேமிப்பு சூப்பர் தொழிற்சாலை பிப்ரவரி 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக உற்பத்தியை தொடங்கியது.
வணிகப் பயன்பாட்டிற்கான மிகப் பெரிய வேதியியல் எரிசக்தி ஆகும். சேமிப்பு மின்கலன்களின் ஆண்டு உற்பத்தி திறன் 10ஆயிரம் அலகுகள் ஆகும். அவற்றின் மின்சாரச் சேமிப்பு அளவு ஏறக்குறைய 40 GWh ஆகும்.
இந்த தொழிற்சாலை ஷாங்காய் தாராள வர்த்தகச் சோதனை மண்டலத்திலுள்ள லிங்காங் புதிய பகுதியில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 2 லட்சம் சதுர மீட்டராகும்.
சீனாவின் எரிசக்தி சேமிப்பு சந்தையில் பெரும் ஆற்றல் உள்ளது. ஷாங்காய் எரிசக்தி சேமிப்பு சூப்பர் தொழிற்சாலை டெஸ்லாவின் உலகளாவிய எரிசக்தி அலுவலுக்கான முக்கிய வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்தது.