செம திட்டம் : ரூ.333 தினமும் போட்டாலே 17 லட்சம் அள்ளலாம்!

Estimated read time 1 min read

தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) திட்டம் குறித்து பார்ப்போம்.. போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத் திட்டம் (RD) அதாவது ரெக்கரிங் டெபாசிட் திட்டமாகும்.. ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து கடைசியில் வட்டியுடன் பெரிய தொகையை பெற முடியும்.. இது ஒரு வகையான சேமிப்பு திட்டமாகும்.

வெறும் ரூ.100-ல் தொடங்கலாம் என்பதே இந்த திட்டத்தின் பிளஸ் பாயிண்ட்டாகும்.. தினமும் சேமிக்க ஆரம்பித்தாலே, அது வருங்காலத்தில் ஒரு பெரிய தொகையாக மாறுகிறது என்பதால், ஏராளமானோரின் கவனத்தை இந்த திட்டம் ஈர்த்து வருகிறது..

இதில் ஒரு நாளைக்கு ரூ.333 சேமித்தால் 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம், அதே நேரத்தில் அரசு வழங்கும் 6.70% வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.17,08,546 வரை கிடைக்கும்.. எப்படி தெரியுமா?

ஒருவர்தான் தினமும் ரூ.333 சேமிக்க ஆரம்பித்தால், அது மாதம் ரூ.10,000 ஆகும். இந்த மாதாந்திர சேமிப்பை ஐந்து வருடம் தொடர்ந்தால், மொத்தமாக ரூ.6 லட்சம் சேரும். இந்த தொகைக்கு அரசு தரும் 6.70% வட்டியும் சேரும். அதனால் ஐந்து வருடத்தில் மட்டும் வட்டி ரூ.1.13 லட்சம் வரைக்கும் கிடைக்கும்.

இந்த சேமிப்பை ஐந்து வருடத்தை தாண்டி, 10 வருடம் வரை வைத்திருந்தால், மொத்த சேமிப்பு 12 லட்சத்தை தாண்டும். அதற்கு மேலாக வட்டி மட்டும் சுமார் ரூ.5,08,546 வரும். இதனால், 10 ஆண்டுகளின் முடிவில் சேரும் மொத்த தொகை கிட்டத்தட்ட ரூ.17,08,546 ஆகும். இதுதான் இந்தத் திட்டத்தின் அடுத்த பிளஸ் பாயிண்ட்டாகும்.

அதேபோல், ஒரு நாளைக்கு ரூ.222 சேமிக்க முடிந்தால் மாதம் ரூ.6,660, அதாவது 5 ஆண்டுகளில் ரூ.3,99,600 வைப்பு, வட்டியுடன் ரூ.4,75,297 ஆக அதிகரிக்கிறது. இதை இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், மொத்த வைப்பு ரூ.7,99,200, 10 வருடங்களின் முடிவில் கிட்டத்தட்ட ரூ.11,37,891 வரை கிடைக்கும்.

மாதாந்திர தொகையை நேரத்திற்கு டெபாசிட் செய்வது கட்டாயம். ஒரு தவணை மிஸ் ஆகிவிட்டால், மாதத்திற்கு 1% அபராதம் கட்ட வேண்டும். தொடர்ந்து 4 தவணைகள் தவறினால் கணக்கு தானாகவே மூடப்பட்டுவிடும்.. 5 வருட காலத்திற்கான இந்த RD திட்டத்தை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதியும் இதில் உண்டு.. மொத்தத்தில் குறைந்த தொகையிலிருந்து பெரிய சேமிப்பை உருவாக்கும் பாதுகாப்பான வழி என்பதாலேயே, இந்த தபால் நிலைய RD திட்டம் இன்று பலருக்கு நம்பிக்கையான வருங்கால சேமிப்பாக திகழ்ந்து கொண்டிருக்கிறது..

Please follow and like us:

You May Also Like

More From Author