இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

Estimated read time 1 min read

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனா்.

நேபாள தலைநகா் காத்மாண்டில் கடந்த 11ம் தேதி இரு நாடுகளின் 10-ஆவது திட்ட வழிகாட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியுறவு அமைசக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தியா, நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது மற்றும் ரயில்வே துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக நேபாளத்தின் ஜனக்புரி மற்றும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இடையே பயணிகள் ரயில் சேவையை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author