ஜப்பான் வீரர்களின் வருத்தம் ஜப்பான் அரசியல் வட்டத்தின் ஒத்த கருத்தாக மாற வேண்டும்

ஜப்பான் வீரர்களின் வருத்தம் ஜப்பான் அரசியல் வட்டத்தின் ஒத்த கருத்தாக மாற வேண்டும்

79 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ஆம் நாள், ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தது. அதனையடுத்து, 14 ஆண்டுகால இரத்தக்களரி போராட்டத்திற்குப் பிறகு, சீன மக்கள் பெரும் தேசிய தியாகங்களைச் செய்து ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்புப் போரில் பெரும் வெற்றியைப் பெற்றனர்.

ஆனால், அன்றைய ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் யசுகுனி கல்லறைக்குச் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

அதே வேளையில், ஜப்பானின் முன்னாள் இராணுவத்தின் “731 பிரிவு” உறுப்பினரான 94 வயதான ஷிமிஷு யிங்னான், சீனாவின் ஹார்பின் நகருக்கு வந்து தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

அவரின் இச்செயல் ஜப்பானிய அரசியல்வாதிகளின் குற்றத்தைப் பிரதிபலிக்கும் ஜப்பானிய வீரரின் மனசாட்சிக்கு முற்றிலும் மாறுபட்டது. இது அவரது தனிப்பட்ட மனசாட்சியையும் பெரும் தைரியத்தையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஜப்பான் தரப்பில் உள்ள சிலரால் உண்மையை மறைக்க முடியாது  மற்றும் குற்றத்தை மறுக்க முடியாது என்றும் எச்சரிக்கிறது.

ஆக்கிரமிப்பு குற்றத்தின் எந்தவொரு அழகுபடுத்தலும் மறைப்பும் உண்மையை மாற்ற முடியாது என்பதையும், நீதியின் சக்திகளால் உறுதியாக எதிர்க்கப்படும் என்பதையும் சில ஜப்பான் அரசியல்வாதிகள் அங்கீகரிக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author