சீனாவின் துணை அரசுத் தலைவர் கென்யாவில் பயணம்

Estimated read time 1 min read

கென்யாவின் துணை அரசுத் தலைவர் கின்டிக்கியின் அழைப்பை ஏற்று, சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் செங் மார்ச் 22ம் நாள் முதல் 25ம் நாள் வரை, கென்யாவில் பயணம் மேற்கொண்டார். நைரோபியில் கென்ய அரசுத் தலைவர் ரூட்டோவைச் சந்தித்த அவர், துணை அரசுத் தலைவர் கின்டிக்கியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். சீனாவுக்கான சுங்கவரியற்ற கென்யாவின் ஏற்றுமதிப் பொருட்களின் கண்காட்சி மற்றும் சீன-கென்யா வணிகக் கருத்தரங்கில் ஹான் செங் உரைநிகழ்த்தினார்.

இதற்கிடையில், கென்யாவின் மும்பாசா-நைரோபி ரயில் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட ஹான் செங், சுங்கவரியற்ற கென்ய ஏற்றுமதிப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றிச்சென்ற முதலாவது சரக்கு ரயிலின் புறப்பாட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

You May Also Like

More From Author