சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி

புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் சீனச் சரக்குகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 32 இலட்சத்து 33 ஆயிரம் கோடி யுவானாகும்.

இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகமாகும். இதில் ஏற்றுமதித் தொகை 6.2 விழுக்காடு அதிகம். இறக்குமதித் தொகை 4.1 விழுக்காடு அதிகம். உலகப் பொருளாதாரம் மீட்சி அடைந்த போக்கில் உள்ளது.

உலக வர்த்தக பாதுகாப்பு தீவிரமடைந்து வருகின்றது. இப்பின்னணியில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் எதிர்பார்ப்புகளை விட மேலும் நிதானமாக வளர்ந்து வருவது உண்மையில் எளிதல்ல என்று சர்வதேசப் பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.


உள்நாட்டில், ஒருங்கிணைந்த உற்பத்தி துறையின் விநியோகச் சங்கிலி, பெரிய அளவிலான பொருளாதாரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் ஆகியவற்றிலிருந்து இது பயனடைகிறது. வெளிப்புறத்திலிருந்து, அண்மையில், வெளிப்புற தேவையின் மீட்சி சீனாவின் ஏற்றுமதிக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கியுள்ளது.


தற்போது, சீனாவின் மின்சார வாகனங்கள், லித்தியம் மின்கலன் மற்றும் ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் ஆகியவை 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது உலக விநியோகத்தைச் செழிப்பாக்குகின்றது.

பணவீக்க அழுத்தங்களைத் தணித்தது மட்டுமல்லாமல், உலகக் காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மாற்றத்தைச் சமாளிப்பதில் மாபெரும் பங்காற்றியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி தொடர்ந்து வலுப்பட்டு வருகின்றது. இது சீனப் பொருளாதாரத்தின் உறுதிதன்மை மற்றும் உயிர்ச்சக்தியைப் பிரதிபலிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author