அமெரிக்க டாலரில் ட்ரம்ப் கையெழுத்து: 165 கால பாரம்பரியத்தை உடைக்கும் டிரம்ப்  

Estimated read time 1 min read

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டின் புதிய பணத்தாள்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அமெரிக்கக் கருவூலத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து பணத்தாளில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த அறிவிப்பின் மூலம், 1861-ஆம் ஆண்டு முதல் கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு முக்கியப் பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது.
இதுவரை அமெரிக்கப் பணத்தாள்களில் ‘அமெரிக்கக் கருவூலப் பொருளாளர்’ கையெழுத்து இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. இனி அந்த இடத்திற்குப் பதிலாக அதிபர் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும்.

You May Also Like

More From Author