பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்தியர்களின் கதி என்ன?  

Estimated read time 1 min read

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு, ஈரானுடன் நேரடியாக அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்து, அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக விடிய விடிய ஈரானியத் துறைமுகங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருவதால், உலகிலேயே மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author