பெங்களூர் லூலூ மால் அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து தீப்பிடித்து எரிந்தது  

Estimated read time 1 min read

பெங்களூரில் பரபரப்பு மிகுந்த லூலூ மால் அருகே நேற்று நள்ளிரவில் கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
இந்தப் பேருந்தில் பயணம் செய்த 21 பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவ்விதக் காயமுமின்றிப் பத்திரமாக உயிர் தப்பினர்.
மார்ச் 26-ஆம் தேதி இரவு சுமார் 10.20 மணியளவில், பெங்களூர் மஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து ஷிவமோகா நோக்கிப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
லூலூ மால் அருகே பேருந்து வந்தபோது, அதன் அடிப்பகுதியில் இருந்து திடீரெனத் தீப்பிழம்புகள் எழத் தொடங்கின.

You May Also Like

More From Author