சீன அரசவையின் 4ஆவது ஊழல் தடுப்புப் பணிக் கூட்டத்தில் சீன தலைமையமைச்சர் வலியுறுத்தல்

சீன அரசவையின் 4ஆவது ஊழல் தடுப்புப் பணிக் கூட்டம் 27ஆம் நாள் நடைபெற்றது.

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் வலியுறுத்தியதாவது,

புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனை என்ற வழிகாட்டலில், மேலும் உயர்ந்த தரம் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தும் நெடுநோக்கு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசின் நீதி தவறாத ஆட்சி முறை கட்டுமானம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை விரைவுபடுத்துவது, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் காலக்கட்டத்தில் இலக்குகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வலிமையான ஆதரவுகளை வழங்க வேண்டும் என்றார்.

கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்தும் நெடுநோக்கு கோட்பாடு, அரசாங்கப் பணியின் முழு நடைமுறையாக்கத்தில் செயல்படுத்தபட வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author