சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில் நடைபெற்ற போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம், ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகத்தில் சுதந்திரமான சுங்க நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட 100ஆவது நாளையும், இம்மன்றம் நிறுவப்பட்டதன் 25ஆவது ஆண்டு நிறைவையும் வரவேற்றதால், பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இம்மன்றக் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 2000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், உயர்தர வெளிநாட்டுத் திறப்பு என்பது அவர்கள் அதிகபட்சமாக குறிப்பிட்ட வார்த்தையாக மாறியுள்ளது.
முந்தைய காலத்தை மீளாய்வு செய்தால், உலகளவில் உயிராற்றல் மிக்க பிரதேசமாக ஆசியா மாறுவதற்கு, திறப்பு மற்றும் ஒத்துழைப்பில் நிலைத்து நிற்பது ஒரு மிக முக்கியமான அனுபவமாகும். நடப்பு மன்றக் கூட்டத்தில் சீனா வழங்கிய முன்மொழிவுகள் விருந்தினர்களிடையே மறுமொழி பெற்றுள்ளன. சீனாவின் திட்டம் முதல் சீனா வழங்கிய உலகளாவிய முன்னெடுப்புகள் வரை, திறப்பு என்பதை தெளிவாக காட்டியுள்ளது என்று சர்வதேச விருந்தினர்கள் குறிப்பிட்டனர்.
சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், உயர்தர வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவது குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் திறந்த சீனா உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையானது மிக அரிதான வளம். 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனா, உலகளவில் மிகப்பெரிய மிக வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வருமான குழுவைக் கொண்டு, உள்நாட்டு தேவையில் பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் மாற்றத்துக்கு புதிய வளர்ச்சி இயக்காற்றல் தேவை. 2025ஆம் ஆண்டில் சீனாவின் புத்தாக்க குறியீடு முதன்முறையாக உலகின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நுழைந்தது. மேலும் முக்கிமானதாக, பாதுகாப்பு வாதம் தலைதூக்கிய நிலையில், சீனாவின் திறப்பானது தற்போதைய உலகம் பிடிக்கக் கூடிய நிலைத்தன்மையாக மாறியுள்ளது.
இவ்வாண்டின் நவம்பரில் ஷென்ஜென் நகரில் ஏபெக் அமைப்பின் 33ஆவது பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தை சீனா நடத்த உள்ளது. போஆவ் முதல் ஷென்ஜென் வரை, உலகுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு கூட்டாக எதிர்காலத்தை உருவாக்குவது என்பது தனது மாறாத மன உறுதி என்பதை சீனா மீண்டும் செயல்களின் மூலம் நிரூபித்துள்ளது.
