6ஆவது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

6ஆவது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 22ஆம் நாள், சீனாவின் ஹைய்நான் மாநிலத்தின் சான் யா நகரில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் சான் யி ச்சின் அம்மையார் இப்போட்டியைத் தொடங்கி வைத்தார். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 1600 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

துவக்க விழாவுக்கு முன்னதாக சான் யி ச்சின் அம்மையார், இக்கவுன்சிலின் தலைவர்  இளவரசர் அகமது அல்-பஹத் அல்-சபாவினைச் சந்தித்துரையாடினார்.

You May Also Like

More From Author