4 தொகுதியிலும் உதயசூரியனில் போட்டி – வைகோ அறிவிப்பு..!

Estimated read time 1 min read

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மதுரை தெற்கு- பூமிநாதன், மொடக்குறிச்சி செந்தில்நாதன், கடையநல்லூர்-தி.மு.ராஜேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் போட்டியிட உள்ளனர்.

இதில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடுகிறது என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சற்று முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டி என வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார்.

சீர்காழி(தனி) தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றியுள்ளார்.

இதனால், அந்தத் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே களமிறங்குவார்.

You May Also Like

More From Author