உலக இளைஞர் அமைதி மாநாடு ஷிச்சின்பிங்கின் செய்தி

உலக இளைஞர் அமைதி மாநாடு ஷிச்சின்பிங் 29ஆம் நாள் செய்தி அனுப்பினார்.

அவர் இதில் கூறுகையில்,

இவ்வாண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். 80 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்களுடன் இணைந்து, சீன மக்கள், இன்னல்களைச் சமாளித்து, பாசிசவாதத்தைத் தடுத்து, மதிப்பு மிக்க அமைதியைப் பெற்றுள்ளனர் என்றார்.

அமைதிக்கான எதிர்காலத்துக்கு, இளைஞர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். பல்வேறு நாடுகளின் இளைஞர்கள், இம்மாநாட்டில், சிந்தனையைப் பரிமாறிகொண்டு, புரிந்துணர்வை வலுப்படுத்தி, நட்புறவை மேம்படுத்த வேண்டும். அமைதி கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி, அமைதி வளர்ச்சியை விரைவுபடுத்தி, மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்குவதற்கு ஆற்றலையும் அறிவுத் திறமையை வழங்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

இதே நாளில், இக்கூட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. அமைதிக்காக ஒன்றிணைப்பது என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் மற்றும் சீனத் தேசிய இளைஞர் சம்மேளனம் இம்மாநாட்டைக் கூட்டாக நடத்தின.

Please follow and like us:

You May Also Like

More From Author