சென்னை இசை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இசையமைப்பாளர் அனிருத் நடத்தவிருந்த ‘Hukum’ இசை நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து நீதிபதி தனது உத்தரவில், காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு, சமூக, போக்குவரத்து அல்லது சத்தம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம், அனிருத் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இசை நிகழ்ச்சி எந்த இடத்தில், எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
