ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி  

Estimated read time 1 min read

ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒதுக்கீட்டிலிருந்து அவருக்கு பேசுவதற்கான நேரத்தை மறுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது என ANI செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலங்களவையில் ராகவ் சத்தாவிற்கு பதிலாக அசோக் மிட்டலை ஆம் ஆத்மி கட்சி பரிந்துரைத்துள்ளது.
மிட்டலின் நியமனத்தை விரைவுபடுத்துமாறு மாநிலங்களவை செயலகத்திடம் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

More From Author