அணு பாதுகாப்புக்கான பொது சமூகத்தை கூட்டாக பாதுகாக்க வேண்டும்:கருத்து கணிப்பு

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமாகி வருகின்றன. ஈரானுள்ள அணுமின் நிலையம் உள்ளிட்ட பல வசதிகள் தாக்குதல் இலக்குகளாக மாறியுள்ளன. இந்நிலையில் சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் ஊடகம் உலகளவில் நடத்திய கருத்து கணிப்பின்படி, உலகளாவிய அணு ஆயுதப் பரவல் மற்றும் இடர்கள் விரைவாக அதிகரித்து வருகின்றன என்று 89.2 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் நிலைமைக்கிணங்க உகந்த அணு பாதுகாப்பு கொள்கை மற்றும் நடவடிக்கைகளைத் தெரிவு செய்யும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று 92.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர். அமைதி நோக்கிற்காக அணு ஆற்றலைப் பயன்படுத்துவது மனிதகுலத்தின் பொது விருப்பம் என்றும் அணு பாதுகாப்பை உறுதி செய்வது பல்வேறு நாடுகளின் பொது கடமை என்றும் 91.4 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

அணு பாதுகாப்புக்கான பொது சமூகத்தை உருவாக்குவது என்ற முன்னெடுப்பை வழங்கிய சீனா, சர்வதேச அணு பாதுகாப்பு முறைமையின் கட்டுமானத்தை வலுப்படுத்துவதே அணு ஆற்றல் துறையின் சீரான வளர்ச்சிக்கு அடிப்படை முன்நிபந்தனையாகவும், உலகளாவிய பாதுகாப்பு நிர்வாகத்தை முன்னேற்றுதல், புதிய சர்வதேச உறவுகளை உருவாக்குதல், உலக ஒழுங்கை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது என்று தெரிவித்துள்ளது. சீனாவின் இக்கருத்தை 84.2 விழுக்காட்டினர் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author