ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-35 (F-35) ரக ஸ்டீல்த் போர் விமானத்தை ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் மத்திய வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம், ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) நவீன வான் பாதுகாப்பு அமைப்பால் தாக்கப்பட்டதாகவும், இதில் விமானம் முற்றிலும் சிதைந்ததால் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author