ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்கள் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனில் அரசுக்கு எதிராக வரும் செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.