அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்திற்கு வரவேற்பு: சீனா

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நீங் ஏப்ரல் 8ஆம் நாள், மத்திய கிழக்குப் பகுதியின் புதிய நிலைமை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான போர் நிறுத்தத்தைச் சீனா வரவேற்பதாகத் தெரிவித்தார்.  பல்வேறு தரப்புகள் கூட்டாக முயற்சி செய்து, ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப் போக்குவரத்தை விரைவில் மீட்கப் பாடுபட வேண்டும். இதற்குச் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் என்றார்.

மேலும் வளைகுடா நாடுகளின் இறையாண்மை பாதுகாப்பு மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைபாட்டிற்கு முழுமையாக மதிப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நீர்வழிப் போக்குவரத்தும், எரியாற்றல் அடிப்படை வசதிகளின் பாதுகாப்பும் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author