சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, 8ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் போர்ச்சுகலின் நாடாளுமன்ற தலைவர் அகியார்-பிரான்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், இருநாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதிலிருந்து, போர்ச்சுகல் ஒரே சீனா என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்றார். பரஸ்பர முக்கிய நலன்கள் மற்றும் அக்கறைகளுக்கு மதிப்பு அளித்து, சமமான மற்றும் நேர்மையான உரையாடல் அடிப்படையில் ஒத்த கருத்துக்களைத் தொடர்ந்து உருவாக்கி விரிவுபடுத்த, போர்ச்சுகலுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
போர்ச்சுகல்-சீனா பன்முக உத்திநோக்கு கூட்டாளியுறவை ஆழப்படுத்துவது, போர்ச்சுகலில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கியமான ஒருமித்த கருத்தாகும் என்றும், சீன தேசிய மக்கள் பேரவையுடன் நட்பார்ந்த பரிமாற்றங்களை வலுப்படுத்த போர்ச்சுகல் விரும்புகிறது என்றும் அகியார்-பிரான்கோ தெரிவித்தார்.
