தமிழக பாஜக தேர்தல் அறிக்கை  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 150-வது பிறந்தநாளில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் பழமையான நாகரிகத்தின் தொட்டில் தமிழ்நாடு” என்று புகழாரம் சூட்டிய நட்டா, அதே வேளையில் ஆளுங்கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

தமிழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தைச் சீரமைக்க பல புதிய திட்டங்களை முன்வைத்துள்ள பாஜக, இந்தத் தேர்தல் அறிக்கையின் மூலம் வாக்காளர்களைக் கவர முயன்றுள்ளது.

ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, மாற்றத்திற்கான ஒரு மாற்றாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் பாஜகவின் இந்த வாக்குறுதிகள் தேர்தல் களம் முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

You May Also Like

More From Author