சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 17ஆம் நாள் நடத்திய 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்கம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது குறித்த பணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் வாங் சாங்லின் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பல புத்தாக்க நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதன்மை குறிக்கோள்களை தடையின்றி நனவாக்கும் வகையில், அடுத்த கட்டத்தில் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை ஆழமாக செயல்படுத்தி, தேசிய அளவிலான சிறப்பு திட்டங்களின் வெளியீட்டை முன்னேற்றவும், 109 முக்கிய மற்றும் பெரிய திட்டப்பணிகளின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி, பொருளாதாரம் சீரான நிலையில் வளரும் போக்கை தொடர்ந்து வலுப்படுத்தவும் வேண்டும் என்று தெரிவித்தார்.
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை ஆழமாக செயல்படுத்த வேண்டும்
Estimated read time
0 min read
