சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷச்சின்பிங் மக்களுக்காக சுறுசுறுப்பாக பாடுபட்டு வருகிறார். முன்னதாக ஹெபெய் மாநிலத்தின் ஜெங்திங் மாவட்டத்தில் பணி புரிந்த போது, அவர் மிதிவண்டியில் முழு மாவட்டத்திலும் பயணித்து பொது மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
ஃபுஜியன் மாநிலத்தின் நிங்தெ நகரில் இருந்த போது, மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள, மிக தூரமான மிக கடினமான இடங்களுக்கு அவர் சென்றார். சேஜியாங் மாநிலத்தில் கடுமையான சூறாவளியைச் சமாளித்து, மக்களை பாதுகாப்பாக இடம்மாற்ற, அவர் இரவுப் பகலாக வழிகாட்டினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மாநாட்டுக்கு பின், பொது செயலாளர் ஷிச்சின்பிங் 100க்கும் அதிகமான முறை நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவரைப் பொருத்தவரை, மக்களின் கவலையைத் தீர்ப்பது தான் நாட்டின் முக்கிய விஷயமாகும்.
மக்களுக்கு சேவை புரிவது எனது பணியாகும். சோர்வாக இருந்தும், மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.