2026 சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பரப் படம் ஆப்பிரிக்காவில் அறிமுகம்

சீன பாரம்பரிய புத்தாண்டு நெருங்கி வருவதால், சீன ஊடக குழுமத்தின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பரப் படம் ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டன. கென்யா, எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இக்கலை நிகழ்ச்சியை கருப்பொருளாக கொண்ட ஒளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆப்பிரிக்க மக்கள் சீன பாரம்பரிய கலாச்சாரத்தின் அழகை அனுபவிக்க முடியும்.

உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 12ஆம் நாள், 2026ஆம் ஆண்டு மொரிட்டானியாவிலுள்ள சீனர்களுக்கான பாரம்பரிய சீன புத்தாண்டு கலை நிகழ்ச்சி அந்நாட்டின் தலைநகர் நௌக்சோட்டில் நடைபெற்றது. இதில், சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பரப் படம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சீன கலாச்சாரம் மற்றும் நவீன நாகரிகம் ஒருங்கிணைந்த இப்படம், புத்தாண்டின் பண்டிகை சூழ்நிலையையும் புதிய யுகத்தில் சீனாவின் உயிராற்றலையும் வெளிக்காட்டியுள்ளது.

You May Also Like

More From Author