சீன அரசு, இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீனப் பொருளாதாரத் தரவுகளை 17ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய பொருளாதார தரவுக் குறிப்பீடுகளின் அதிகரிப்பு 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு முதல், தொழில்துறை உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் சந்தை விற்பனையின் மீட்சியை தூண்டும் வகையில், சீன அரசு பல ஊக்குவிப்புக் கொள்கைகளை வெளியிட்டன. இதன் மூலம், குறிப்பிடத்தக்க சாதனைகள் பெறப்பட்டுள்ளன.
பிரான்ஸின் டெகாத்லான் நிறுவனத்தின் சீனாவுக்கான துணை தலைமை இயக்குநர் ட்சாங் ட்சுன்டீ கூறுகையில், சீனச் சந்தையின் வாய்ப்பை இறுகப்பற்றி முன்னெடுத்து செல்லும். அடுத்த ஒன்று, இரண்டு ஆண்டுகளில்,சீனாவில் புதிதாக துவங்கும் கடைகளின் எண்ணிக்கை 20முதல் 30வரை எட்டவுள்ளது என்றார்.
சீனாவில், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் தொழிலின் புத்தாக்கத்தின் ஒன்றிணைப்பு தொடர்ந்து விரிவாகி வருவதோடு, புதிய உந்து ஆற்றலால் உற்பத்தி வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சீனச் சந்தையின் திறப்பு தான், வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள் சீனாவில் வணிகம் செய்வதற்கு மேலதிக நம்பிக்கை அளித்துள்ளது. 2025ஆம் ஆண்டு முதல், பல முக்கிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டப்பணிகள் சீனாவில் அடுத்தடுத்து துவங்கின. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை 3300கோடி அமெரிக்க டாலரை எட்டுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வெளிப்புற சூழல் மேலும் சிக்கலாகவும் கடுமையாகவும் மாறியுள்ளது. இப்பின்னணியில், மாபெரும் சந்தை, முழுமையான தொழில் முறைமை, வளமான மனித வள ஆற்றல் முதலிய சாதகங்கள் சீனாவுக்கு உள்ளன. அதே வேளை, தேவையின் மேம்பாடு, கட்டமைப்பு மேம்பாடு, இயக்க ஆற்றலின் மாற்றம் ஆகியவற்றுக்கான பரந்துபட்ட வாய்ப்புகளையும் சீனா கொண்டுள்ளது.