பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் சிறப்பு அழைப்பின் பேரில் மே 7ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானத்தின் மூலம் ஹவ்தெஸ் பைரனீஸ் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார்.
இரு தரப்பினரும் சில முக்கியமான விவகாரங்கள் குறித்து இனிமையான சூழ்நிலையில் கலந்துரையாடினர்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் மானிட பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்க வேண்டும். மேலும், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை மேம்படுத்தி, சீன-பிரான்ஸ் மற்றும் சீனா-ஐரோப்பிய மக்களுக்கிடையிலான நட்புறவைத் தொடர வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங்குடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, ஐரோப்பிய மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக பங்காற்ற விரும்புகிறேன் என்று மக்ரோன் தெரிவித்தார்.