பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி

Estimated read time 1 min read

பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். சீன அரசின் நட்பு விருந்தையும் அவர் முன்பு பெற்றார். இந்தக் கௌரவத்தை மிகப் பேணிக்காத்து வருகிறேன் என்றும் ஹெக்மேன் தெரிவித்தார். சீனாவில் பெரும் கவனம் செலுத்தி வருகிற அவர் சீனா பற்றியும் பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.

சீனாவின் மாபெரும் சாதனைகளை நேரில் கண்டுள்ள அவர் கூறுகையில், சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து பெரும் உயிராற்றலுடன் காணப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் உணர முடிகிறது என்று தெரிவித்தார்.

சீனப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை, நீண்டகாலமான தனது அவத்தானிப்பிலிருந்து கிடைத்துள்ளது. சீன மக்கள் விவேகம் மிக்கவர்கள். சமூகத்திற்கு ஆழமான பண்பாடும் அறமும் உண்டு. சீன மக்கள் செயல் திறனுக்கு முக்கியத்துவம் அளித்து எப்போதும் உணர்ச்சிப்பூர்வமாக உழைத்து வருகிறார்கள் என்றும் ஹெக்மேன் கருத்து தெரிவித்தார்.  

You May Also Like

More From Author