பெய்ஜிங்கில் மாரத்தான் போட்டியில் மனிதர்களின் சாதனையை முறியடித்த ரோபோக்கள்

Estimated read time 1 min read

 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மனித உருவ ரோபோக்களின் 2ஆவது அரை மாரத்தான் ஓட்டப் போட்டி ஏப்ரல் 19ஆம் நாளன்று நடைபெற்றது.

இவ்வாண்டின் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ரோபோட் அணிகள் பங்கேற்றன. மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து சர்வதேச அணிகளும் கலந்து கொண்டன.

தட்டையான  பகுதிகள், கடினமான மேடுகள், கிட்டத்தட்ட 90 டிகிரி திருப்பங்கள், நகர்ப்புறங்கள், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் ஈரநிலங்கள் உள்ளிட்டவை அடங்கிய பந்தயப் பாதையில் மனிதர்களும் ரோபோட்டுகளும் பங்கேற்றன.

இப்போட்டியில், ஆற்றல் சேமிப்பு, மனிதர்களைப் போல இயக்கம், சிறந்த வடிவமைப்பு, நிகழ்நேர சூழல் தகவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ரோபோட்டுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இறுதியில் Honor என்ற குழுவைச் சேர்ந்த மனித வடிவ ரோபோட் 50 நிமிடங்கள் 26 விநாடியில் பந்தய தூரமான 21 கிலோமீட்டர் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததோடு, மனிதர்களின் சாதனையையும் முறியடித்தது. கடந்த ஆண்டுப் போட்டியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டில் மனித உருவ ரோபோக்களின் செயல்திறன் அதிகளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த மனித வடிவ ரோபோ சுமார் 2 மணி நேரம் 41 நிமிடம் ஓடியது.

Please follow and like us:

You May Also Like

More From Author