சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுலை 11ஆம் நாள் கோலாலம்பூரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். அப்போது, சீன-அமெரிக்க உறவு மற்றும் பொது அக்கறை செலுத்தும் விவகாரங்கள் பற்றி இருவரும் கருத்துக்களைப பரிமாறிக் கொண்டனர்.
சீன-அமெரிக்க உறவை வளர்ப்பதில் சீனாவின் கோட்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகளை விரிவாக விளக்கி கூறிய வாங் யீ, இரு நாட்டு தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்துக்களை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைதியான சகவாழ்வு, ஒத்துழைப்புடன் வெற்றி-வெற்றி அடைவது ஆகிய இலக்குகளுடன், அமெரிக்கா சீனா குறித்த கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும்,சீனாவுடன் இணைந்து புதிய காலத்தில் சீனா-அமெரிக்கா இடையே சரியான சகவாழ்வுக்கான வழிமுறையைத் தேடுவதற்காக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது, நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக இரு தரப்பினரும் கருதினர். தூதாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொடர்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் வலுப்படுத்தி, இரு நாட்டுறவில் தூதாண்மை துறையின் பங்களிப்பை செயல்படுத்தி, கருத்து வேறுப்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அதேசமயம், ஒத்துழைப்புகளின் விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர் .