நாட்டின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள் என்னும் புத்தகத் தொகுப்பின் 5வது பகுதி அண்மையில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டது.
2022ஆம் ஆண்டு மே 27ஆம் நாள் முதல், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் வழங்கிய அறிக்கைகள், உரைகள், பேச்சுவார்த்தைகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், உத்தரவுகள் உள்ளிட்ட 91 பதிவுகள், இந்தப் புத்தகத் தொகுப்பின் 5வது பகுதியில் இடம்பெறுகின்றன.
பதற்றமான சர்வதேச சூழ்நிலை மற்றும் உள்நாட்டின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக் கடமையை எதிர்நோக்கிய போது, தோழர் ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, புதிய வளர்ச்சி சிந்தனையைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, உயர்தர வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, சீர்திருத்தத்தை ஆழமாக்கி, நவீன சோஷலிச நாட்டின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தி வருகின்ற நடைமுறைகள், இந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீனக் கருத்து, சீனத் திட்டப்பணி, சீன ஞானம் ஆகியவை பற்றிய சர்வதேச சமூகத்தின் புரிந்துணர்வை ஆழமாக்கி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.