ஈரானிலிருந்து யுரேனியத்தை பெறுவது ‘நீண்ட மற்றும் கடினமான’ செயல்முறை: அதிபர் டிரம்ப்  

Estimated read time 1 min read

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு, அங்கிருந்து யுரேனியத்தைப் பெறுவது “நீண்ட மற்றும் கடினமான” செயல்முறையாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை முழுமையாக அழித்துவிட்டதாக அவர் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை முற்றிலும் நிர்மூலமாக்கிவிட்டது. எனவே, அங்கிருந்து சிதைந்த பொருட்களை அகழ்வாராய்ச்சி செய்து எடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை “அணுசக்தி தூசி” என்று டிரம்ப் தொடர்ந்து வர்ணித்து வருகிறார்.

You May Also Like

More From Author