தமிழகத்தில் நாளை முதல் மழை: வானிலை மையம் கொடுத்த குட் நியூஸ்  

Estimated read time 0 min read

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, நாளை முதல் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு சத்தீஸ்கர் முதல் குமரிக் கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பின்வரும் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை(ஏப். 22): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 23 முதல் 25 வரை: குறிப்பிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப். 26, 27: மீண்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

You May Also Like

More From Author