கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை “தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளான இந்த ஆண்டின் ”தியாகத் திருநாள்” நாளை (18.11.2025) அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
செக்கிழுத்த தியாகச் செம்மல் ! கப்பலோட்டிய தமிழன்! வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 5.9.1872 அன்று மகனாகப் பிறந்தார். ஒட்டப்பிடாரத்தில் அடிப்படைக் கல்வியையும், தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்டார்.
ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், தூத்துக்குடியில் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே “கப்பலோட்டிய தமிழன்” எனப் பெயர் பெற்றார்.
வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காகப் பொதுமக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்கள். இதன் காரணமாக, 1908-ம் ஆண்டு கோவை சிறையில் அடைத்தும் வ.உ.சி.யை செக்கிழுக்க வைத்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழியான தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களைப் படைத்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் யூடியூப் தளத்தில் தான் பதிவிட்ட சிறு காணொளியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஆசையில், 9 வயது சிறுவன் மைக் செய்த விபரீத காரியம் [மேலும்…]
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தாகி 66 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தெற்காசியாவின் மிக முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமாக [மேலும்…]
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகக் கூறி, யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு [மேலும்…]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024, 2026 [மேலும்…]
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், அக்கட்சி அதன் அடையாளத்தை இழந்து [மேலும்…]
நீண்ட தூர இரவு பயணத்தை சவுகரியமாக மாற்றும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலில் [மேலும்…]