நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!

Estimated read time 0 min read

நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 4ம் தேதி பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு, சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாகச் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்த நிலையில், சுசீலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை ஒட்டி 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன.

You May Also Like

More From Author