தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Estimated read time 0 min read

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் – போத்தனூர் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும், சென்னை எழும்பூர் – மதுரை என இருமார்க்கமும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இன்றிரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மேலும், சென்னை எழும்பூரிலிருந்து இன்றிரவு 9.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.,

You May Also Like

More From Author